7.5 கோடி சொத்து மதிப்புள்ள உலகின் மிகப் பெரிய பணக்கார பிச்சைக்காரன்!

உலகின் மிகப்பெரிய பணம் மற்றும் சொத்துக்களுடன் வாழும் தனவந்த யாசகர் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் உலகின் பணக்கார யாசகர் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அவரது நிகர மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாய் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்) என்றும், அவரது மாத வருமானம் 60,000 முதல் 75,000 இந்திய ரூபாய் (சுமார் 2 லட்சம் இலங்கை ரூபாய்) என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபருக்கு 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பும், 30000 ரூபாய் மாத வாடகையில் இரண்டு வணிக நிறுவனங்களும் உள்ளன.
எனினும் இந்த நபர் யாசகம் பெறுவதை நிறுத்தவில்லை எனவும் தினமும் 10-12 மணித்தியாலங்கள் யாசகம் செய்வதில் முனைப்பாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 18 times, 1 visits today)