உலகிலேயே தலைசிறந்த அறிவாளியாகிய இந்திய சிறுவன் : ஐன்ஸ்டீன் கூட இவருக்கு அடுத்தப்படிதான்!

பிரித்தானியவை சேர்ந்த சிறுவனின் அறிவற்றளை கண்டு உலகமே வியந்து நிற்கிறது.
இந்தியாவை தனது பூர்வீகமாகக் கொண்ட குறித்த சிறுவன் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.
10 வயதேயான கிரிஷ் அரோரா உலகிலேயே அதிகளவு அறிவுத்திறன் கொண்டவராக அறியப்படுகிறார்.
அண்மையில் அவருக்கு அறிவுதிறன் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதில் அவர் உலகின் தலைசிறந்த அறிஞர்களாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் டாப் 1%ல் கிரிஷ் அரோரா இடம்பிடித்துள்ளார்.
இவ்வளவு ஐக்யூ மார்க் பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார்.