இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ள உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர்

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
2026ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அணி குறித்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)