மகளிர் உலகக் கோப்பை – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், கவுகாத்தியில்(Guwahati) உள்ள பர்சபாரா (Barsapara) மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவி செய்தது.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் தனி ஆளாக நின்று சிறப்பாக விளையாடிய லாரா வால்வார்த்(Laura Wolvaardt) 169 ஓட்டங்களும் தஸ்மின் பிரிட்ஸ்(Tazmin Brits) 45 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து, 320 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் நாட் ஸ்சிவர்-ப்ருன்ட்(Nat Sciver-Brunt) 64 ஓட்டங்களும் அலிஸ் கேப்சி(Alice Capsey) 50 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இறுதியில், பிரபல இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று நடக்கவுள்ள தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.





