செய்தி விளையாட்டு

Women’s WC – இந்தியாவுக்கு எதிராக சாதனை வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் ஸ்மிருதி (Smriti Mandhana) 80 ஓட்டங்களும் பிரதிகா (Pratika Rawal) 75 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

இதையடுத்து, 331 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான ஹீலி (Alyssa Healy) அதிரடியாக விளையாடி 142 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி வெற்றிக்காக போராடி வந்த நிலையில் போட்டியின் ஆரம்பத்தில் உபாதைக்கு உள்ளாகி வெளியே சென்று மீண்டும் வந்த எல்லீஸ் பெரி (Ellyse Perry) 47 ஓட்டங்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இறுதியில், ஆஸ்திரேலியா 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ஓட்டங்கள் பெற்று அபார வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலின் படி, ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 4 போட்டிகளில் 2 போட்டிகளை வென்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!