செய்தி விளையாட்டு

Women’s T20 WC – ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதில் அலிசா ஹீலி 26 ரன்னிலும், பெத் மூனி 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அதனை தொடர்ந்து களம் இறங்கிய எல்லிஸ் பெர்ரி 30 ரன்னிலும், போப் லிட்ச்பீல்ட் 18 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் ரன் எடுக்காமலும், ஜார்ஜியா வேர்ஹாம் 4 ரன்னிலும், ஆஷ்லே கார்ட்னர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

See also  ஒரே பெண்ணுக்கு 20 முறை திருமணம்

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கணைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 88 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content