சமூக ஊடகங்களால் ஆபத்தில் சிக்கும் பெண்கள் – எச்சரிக்கும் ஆய்வு!

சமூக ஊடகங்களில் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையிலான பதிவுகள், மற்றும் தீங்கு விளைவிக்கும் இடுகைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
குறிப்பாக எக்ஸ் தளம் மற்றும் டிக்டொக் உள்ளிட்டவற்றில் பெண்களை பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்களை விட பெண்கள் கணிசமாக அதிக தீங்கு விளைவிக்கும் இடுகைகளை எதிர்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனமான மோலி ரோஸ் அறக்கட்டளை 2000 இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பான கருத்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதில் இளைஞர்கள் “நம்பமுடியாத அளவிற்கு தொந்தரவான அளவில்” தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அல்காரிதம் (Algorithm) முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 50 சதவீதமான இளைஞர்கள் அல்காரிதம் முறையில் தீங்குவிளைவிக்கும் உள்ளடக்கங்களை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
குறைந்த நல்வாழ்வு கொண்டவர்கள் என வகைப்படுத்தப்பட்ட 68 சதவீத சிறுவர்கள் ஒரு வாரத்தில் சுயதீங்கு மற்றும் மனச்சோர்வு உள்ளிட்டவற்றை எதிகொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.