வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமானத்தில் நாயை கொண்டுசெல்ல அனுமதி மறுப்பு – பெண்ணின் அதிர்ச்சி செயல்

அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குப்பைப் பையில் உயிரிழந்து கிடந்த நாயின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அந்த 9 வயது வெள்ளை மினியேச்சர் ஸ்க்னாசர் நாயை விமானத்தில் கொண்டுசெல்ல பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் நாயைக் கழிப்பறையில் கொன்று அங்கேயே வீசிச்சென்றதாக நம்பப்படுகிறது.

மிகக் கொடுமையான மிருகவதை குற்றச்சாட்டின் கீழ் பெண் கைதுசெய்யப்பட்டார். பிறகு 5,000 டொலர் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார்.

விமான நிலையத்திலிருந்த கண்காணிப்புக் கேமராவில் அந்தப் பெண் 15 நிமிடங்களுக்கு அதிகாரி ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறகு நாயுடன் கழிப்பறைக்குள் நுழைந்த அவர் 20 நிமிடங்கள் கழித்து நாயின்றித் தனியாக வெளியே வந்தார். பாதுகாப்புப் பரிசோதனைகளை முடித்துவிட்டு கொலம்பியாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறினார்.

நாயை விமானத்தில் கொண்டுசெல்ல போதிய ஆவணங்கள் இல்லாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

(Visited 29 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்