பிரான்ஸில் காதலனுடைய வீட்டில் குளிர்சாதனப்பெட்டிக்குள் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்

பிரான்ஸில் பெண் ஒருவருடைய சடலம் குளிர்சாதனப்பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Grigny (Essonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் கடந்த வியாழக்கிழமை காலை முதல் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை அவரது சடலம் அவருடைய காதலனுடைய வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
44 வயதுடைய அல்ஜீரிய பெண் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. அவரின் 47 வயதுடைய காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
(Visited 12 times, 1 visits today)