இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் – சோதனையிட்ட சிக்கிய பொருட்கள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த சிகரெட்டின் மதிப்பு 35 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியானதென அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் ஒருமுறை சந்தேகத்திற்குரிய பெண் சிகரெட்டை எடுத்துச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை