இலங்கை

யாழில் தனியார் பேருந்து மீது கல் வீசி தாக்கிய பெண்! விசாரணையில் வெளியான காரணம்

யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கல் வீசி பேருந்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி தன்னை கிண்டல் செய்ததால் தான் கற்களை வீசியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் கல் தாக்குதலால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் பயணி ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!