ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்புடன் படுத்து உறங்கிய பெண்!
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தூங்கி எழும்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தன்மீது கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
குயின்ஸ்லாந்தின் (Queensland) பிரிஸ்பேனில் (Brisbane) வசிக்கும் ரேச்சல் ப்ளூர் (Rachel Bloor) என்ற குறித்த பெண் தன்மீது கனமாக ஏதே கிடப்பதாக உணர்ந்ததாகவும், இருப்பினும் அதனை தனது நாய் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.
நாயை அரவணைக்க தனது போர்வையின்மேல் கைவைத்தபோதே அது ஒரு மலைப்பாம்பு என்பதை இனங்கண்டதாக கூறியுள்ளார்.
குறித்த பாம்பு 2.5 மீற்றர் நீளம் வரை இருந்ததாக தெரிவித்த அவர், பின்னர் உதவிக்கு யாரையும் அழைக்காமல் கவனமாக பாம்பை வெளியேற்றியதாக பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்பரைப் பகுதிகளில் இவ்வாறு விஷமற்ற மலைப்பாம்புகள் வாழ்வது இயல்பானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





