பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில், மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள்!
சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை முழுவதிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக அரசாங்கத்தால் நடத்தப்படும் சதொசவிலும் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (04.11) இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத ப்ரவுண் சக்கரை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாயாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சர்க்கரையின் விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் சீனி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.
பண்டைக்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மீளவும் அதிகரிக்கப்பட்டிருப்பதானது வாழ்வாதாரத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக நுகர்வோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.