ஜெர்மனியில் குளிர்கால நேர மாற்றம் – பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் அமுலாகும் குளிர்கால நேரம் மாற்றம் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் எதிர்வரும் 27ஆம் திகதி விண்டர் சைட் என்று சொல்லப்படுகின்ற குளிர் காலத்துக்கான நேரம் மாற்றமானது ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த நேரம் மாற்றத்திற்கு எதிராக பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் பொழுது உடல் ரீதியான பல பாதிப்புக்கள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது கருத்து கணிப்பிலும் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நேர மாற்றத்திற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும், பொதுவான ஒரு நிலைப்பாட்டை ஐரோப்பிய ஓன்றியஉறுப்பினர் முன்வைக்கவில்லை.
இதன் காரணத்தினால் பல முறை இந்த விடயமானது விவாதத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு எடுக்கப்பட்டாலும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடைய முழு ஒத்துழைப்பும் இந்த புதிய சட்ட மாற்றத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இநநிலையில் நேரம் மாற்றம் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்கள் பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.