மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று : இலங்கையின் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் கரையோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சீரற்ற வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமய சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசும்.
காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், மேலும் இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)