இங்கிலாந்தில் 90 மைல் வேகத்தில் வீசும் காற்று : சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
பிரித்தானியாிவல் டாராக் புயல் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதால் 27 புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளை மெட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய புதுப்பிப்பில், தேசிய முன்னறிவிப்பாளர் ஐந்து இங்கிலாந்து பிராந்தியங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு இங்கிலாந்து, மேற்கு மிட்லாண்ட்ஸ், யார்க்ஷயர் & ஹம்பர், வேல்ஸ் மற்றும் டம்ஃப்ரைஸ், காலோவே, லோதியன் மற்றும் பார்டர்ஸ் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மஞ்சள் எச்சரிக்கையானது நாளைய தினம் (08.12) காலை 09 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸின் சில பகுதிகளில் 93 மைல் வேகத்தில் காற்று வீசுவதால் உயிர் ஆபத்துக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் மின்வெட்டு மற்றும் மொபைல் போன் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
#StormDarragh has brought increasingly strong winds overnight, but they are set to peak in the next few hours across parts of Wales and southwest England 🌬️
Stay safe if you are out this morning, and keep up to date with the latest warnings ⚠️
👉 https://t.co/j7ojlIej4g pic.twitter.com/Vg3O770gyd— Met Office (@metoffice) December 7, 2024