பிரித்தானியாவில் சுற்றுலா பயணிகளுக்கு வரி விதிக்கப்படுமா? உள்ளுர் கவுன்சிலர்கள் கோரிக்கை!

பிரித்தானியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பில் தற்போது வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரைட்டன் & ஹோவ் கவுன்சிலர் (Brighton & Hove councillor) பெல்லா சாங்கி ( Bella Sankey) உள்ளூர் அதிகாரிகளுக்கு சுற்றுலா வரியை அமல்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லிவர்பூலில் (Liverpool) நடந்த தொழிலாளர் கட்சி மாநாட்டில் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரங்கள் முதன்மையாக ஒருங்கிணைந்த அதிகாரிகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை கவுன்சிலர்களுக்கும் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரைட்டன் (Brighton) ஆண்டுதோறும் சுமார் 11 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது உள்ளுர் பொருளாதாரத்திற்கு £1.27 பில்லியன் பங்களிக்கிறது.
இந்த வரி விதிப்பானது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையின் அழுத்தங்களை நிர்வகிக்கவும் உள்ளூர் வணிகங்களுக்கு பயனளிக்கவும் உதவும் என்று பெல்லா சாங்கி ( Bella Sankey) பரிந்துரைத்துள்ளார்.