ஒரு நாள் தொடரை வெல்லுமா இலங்கை? நாளை 2 ஆவது போட்டி!
இலங்கை SL மற்றும் இங்கிலாந்து ENG அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் ODI போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் RPS இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் ODI மற்றும் மூன்று டி20 T-20 போட்டிகளில் ஆடவுள்ளது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று (22) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாளை ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகின்றது.





