பதிலடி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T – 20 கிரிக்கெட் போட்டி இன்று (30) நடைபெறுகின்றது.
கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallegala International Cricket Stadium இலங்கை நேரப்படி இன்றிரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இதற்கு முன் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் ODI கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
அந்த வெற்றியின் ஊக்கத்துடன் இங்கிலாந்து அணி டி20 தொடரிலும் முன்னிலை பெறும் முயற்சியில் களமிறங்குகிறது.
மறுபுறம், ஒருநாள் தொடரில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி T – 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பல்லேகல மைதானம் பொதுவாக துடுப்பாட்டத்துக்கு சாதகமானது என்பதால், அதிக ஓட்டங்கள் குவியும் போட்டியாக இது அமையலாம்.





