மினியாபொலிஸில் இருந்து குடியேற்ற முகவர்கள் வெளியேற்றப்படுவார்களா? ட்ரம்ப் பதில்!
அமெரிக்காவின் மினியாபொலிஸில் (Minneapolis) போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து குடியேற்ற முகவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி கூட்டாட்சி அதிகாரிகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை வழங்கவில்லை, ஆனால் “ஒரு கட்டத்தில், நாங்கள் வெளியேறுவோம் என்று மட்டும் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை 37 வயதான செவிலியரான அலெக்ஸ் பிரெட்டி கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் குடியேற்ற முகவர்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கவில்லை.
இருப்பினும் பிரெட்டியை “உள்நாட்டு பயங்கரவாதி” மற்றும் “கொலையாளியாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.





