தென் கொரியாவுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்குமா?

தென்கொரியாவுக்கு மீண்டும் அணு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா பாடுபட வேண்டும் என குடியரசு கட்சியின் செனட்டர் ரோஜர் விக்கர் தெரிவித்துள்ளார்.
செனட் சபையில் அறிக்கை சமர்ப்பித்த அவர், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளால், வடகொரியா உலகளாவிய அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுப்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தற்போதைய யுத்த செலவுகள் 55 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 26 times, 1 visits today)