துருக்கியில் பரவி வரும் காட்டுத்தீ : பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
துருக்கியில் பரவி வரும் காட்டுத்தீ குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக சென்றுள்ள சுற்றுலா பயணிகளே மேற்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
தியார்பாகிர் மற்றும் மார்டி மாகாணங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில், காட்டுத் தீ ஆபத்தானது மற்றும் கணிக்க முடியாதது. அவை எளிதில் தொடங்கி விரைவாகப் பரவும், குறிப்பாக கடுமையான வெப்பத்தின் போது காட்டுத் தீயை ஏற்படுத்துவது தற்செயலாக இருந்தாலும், கிரிமினல் குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே மேற்படி பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.