கனடாவை உலுக்கிய காட்டுத் தீ – வெளியேற்றப்பட்ட பல்லாயிர கணக்கான மக்கள்
கனடாவில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீயை அடுத்து புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கனடாவின் ஆல்பர்ட்டா காட்டுப்பகுதியில் கடந்த வாரம் பற்றிய தீ, காற்றின் வேகத்தால் அதிகரித்துள்ளது.
எண்ணெய் வளம் கொண்ட போர்ட் மெக்முரே நகரை நோக்கி வருவதைத் தொடர்ந்து 6 ஆயிரம் பேர் அந்நகரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நாட்டின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்த நகரில் தான் நடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புறநகர்ப் பகுதிகளான அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய இடங்களில் வசிப்பவர்களும் உடனடியாக வெளியேற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)