நியூசிலாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ – கட்டுப்படுத்த திணறும் பணியாளர்கள்
நியூசிலாந்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, புகழ்பெற்ற தோங்காரீரொ தேசியப் பூங்கா (Tongariro National Park) சேதமடைந்துள்ளது.
பூங்காவின் சுமார் 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கட்டுக்கடங்காத தீயினால் எரித்து நாசமாக்கியுள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பூங்காவின் அமைவிடம் மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான பகுதி என்பதால், தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதியை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும், விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் (ஹெலிகொப்டர்கள்) மூலம் தண்ணீரைப் பாய்ச்சி, கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், தீ வேகமாகப் பரவி பல பகுதிகளை அழித்துள்ளது.
இந்த அனர்த்தத்தின் போது, அந்தப் பகுதியில் இருந்த 40 வரையிலான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மோசமான காலநிலை காரணமாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காலதாமதம் ஏற்படும் எனத் தீயணைப்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.





