லாஸ் ஏஞ்சல்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ : இறுதி வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்தார் பைடன்!
லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ பற்றி எரிவதால் தனது ஜனாதிபதி பதவியின் இறுதி வெளிநாட்டு பயணத்தை ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.
இன்று (09.01) மதியம் வாஷிங்டனில் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு ஜனாதிபதி ரோம் மற்றும் வத்திக்கானுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவர் தனது பயணத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளார்.
போப், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இறுதி நேருக்கு நேர் சந்திப்பை நடத்தவும் தயாராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.





