SLFPயின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ – மைத்திரி அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ முன் நிறுத்தப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதன்கிழமை (01) தெரிவித்தார்.
ஒன்றிய தலைவர் ஓ.இ. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார் என தெரிவித்த மைத்திரிபால, விஜேதாச ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
விஜயதாச ராஜபக்சவுக்கு கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்ததாகவும், பதவிப் பிரமாணம் செய்யும் போது மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததாகவும் அவர் கூறினார்.





