இந்தியா செய்தி

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு அமெரிக்காவின் அனுமதி எதற்கு?

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய இந்தியாவுக்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவையென மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

நாம் எந்த நாட்டில் எரிபொருள் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு ஏன் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஈரான் போரால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்களவையில் கருத்து தெரிவித்த போதே ராகுல் காந்தி இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஈரான் போரால் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க நமக்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை? நாம் எந்த நாட்டில் எரிபொருள் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு ஏன் முடிவு செய்ய வேண்டும்? இது குறித்த புதிரை நான் கண்டுபிடித்துவிட்டேன், அவர்கள் இதில் சமரசம் செய்துகொண்டுள்ளனர்” என்றார்

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!