யார் ஆட்சிக்கு வந்தாலும் கடன் செலுத்த வேண்டும் : பந்துல குணவர்தன!
எந்த அரசாங்கம் நாட்டைக் கைப்பற்றினாலும் 2048 ஆம் ஆண்டு வரை நாட்டின் கடனை செலுத்த வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவு செலவுத் திட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடன் வரம்பை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் பெறும் கடன் தொகையை அதிகரிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய இரண்டு அரச வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்துவதுடன், இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பதற்கான சட்டரீதியான தேவையை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)