அமெரிக்க ஜனாதிபதி யார்? குழப்பமடைந்த Meta AI
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியை அடையாளம் காணுவதில் Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சம் சிக்கலைச் சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதனை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை டொனல்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
ஆனால் நேற்றுமுன்தினம் Metaவின் AI Chatbot அம்சம் ஜனாதிபதி ஜோ பைடன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று கூறியது.
அனைவருக்கும் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி எனத் தெரியும் என்று Meta நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
சில நேரங்களில் AI அம்சங்கள் பழைய தகவல்களைக் கொண்டு பதிலளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அம்சத்தைத் தொடர்ந்து மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
(Visited 14 times, 1 visits today)





