விளையாட்டு

வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? இறுதிப்போட்டி நாளை

ICC T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி (08) நாளை நடைபெறவுள்ளது.

அகமதாபாத் Ahmedabad மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

நடப்பு சாம்பியனான இந்திய அணியும் India , பலம் மிக்க நியூசிலாந்து New Zealand அணியும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இரு அணிகளும் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிக்குச் சென்றுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்ல வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இந்த பரபரப்பான இறுதி மோதலின் மீது திரும்பியுள்ளது.

எனவே, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் நாளைய ஆட்டத்தில் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!