இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் எப்படி இருக்கும்? ஆளுநர் கருத்து!

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதாரம், முதல் காலாண்டில் பதிவானதை போன்று இரண்டாவது காலாண்டிலும் அதே வீதத்தில் வளர்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)