ஐரோப்பா

உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்க மேற்கத்தைய நாடுகள் சதி ; அதிபர் புடின்

உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்க மேற்கத்தைய நாடுகளின் சதியே வாக்னர் குழுவின் கிளர்ச்சி என ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஷ்யாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது. தங்களது படை மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்ற நிலையில் வாக்னர் குழுவுக்கு அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்ததனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உள்நாட்டு கிளர்ச்சி ஏற்படுமோ என்ற அளவிற்கு நிலமை மோசமானது. அதன்பின்னர் பெலாரஸ் நாட்டு அதிபரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட வாக்னர் குழு தலைவர், கிளர்ச்சியை கைவிட்டு வாக்னர் படை வீரர்கள் பின்வாங்கி திரும்பி சென்றனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது,கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷ்யாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில்தான் முடியும். ரஷ்யர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

உள்நாட்டு கிளர்ச்சியை உருவாக்க மேற்கத்தைய நாடுகள் சதி ; குற்றம் சுமத்தும் புடின் | Western Conspiring To Create Civil Insurgency

கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற சிலர், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கைகளில் விளையாடி இருக்கிறார்கள். துரோகிகளான அவர்கள் நீதி முன்பு கொண்டு வரப்படுவார்கள்.வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடிவு செய்த வாக்னர் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

ரஷ்யாவின் எதிரிகள் தவறாக கணக்கிட்டுள்ளனர். வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷ்ய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம். அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ, பெலாரஸ் நாட்டுக்கு இடம் பெயரவோ அல்லது குடும்பத்துடன் திரும்ப செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார். அதேவேளை புதின் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷினின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!