பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது. தொடரை வென்ற மகிழ்ச்சி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்.
வீரர்கள் அனைவரும் சுற்றிருந்த ரசிகர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.