வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 153 ஓட்டங்கள் இலக்கு

வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் (1-0), மற்றும் ஒருநாள் (2-1) தொடரை வென்றது. இதனையடுத்து இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.
டிரினிடாட்டில் உள்ள தபோராவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் இன்று நடந்து வருகிறது .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார் .
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்’செய்தது. தொடக்க வீரர்கள் கில் 1ரன்களும் , இஷான் கிஷான் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 1 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் திலக் வர்மா சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.கடைசியில் ஹர்திக் பாண்டியா 24 ரன்கள் எடுத்தார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.