பலவீனமான போர் நிறுத்தம் : காசாவில் 100 குழந்தைகள் உயிரிழப்பு!
இஸ்ரேல் மற்றும் காசா இடையில் எட்டப்பட்ட பலவீனமான போர் நிறுத்தத்தை தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி இஸ்ரேலின் தரை மற்றும் வான்படை தாக்குதலில் குறைந்தது குறைந்தது 60 சிறுவர்களும் 40 சிறுமிகளும் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தத்திற்குப் பிறகு காசாவில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை காசா சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர், பலவீனமான போர்நிறுத்தத்தின் போது 165 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து 70,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், காசாவில் கிட்டத்தட்ட 80 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





