மத்திய கிழக்கு

இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போட மாட்டோம் – ஹமாஸ்!

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது.

இப்போரில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்பட வில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார்.

ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம்.

ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது எனக் கூறப் பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.