அரசியல் இலங்கை செய்தி

சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.

எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார்.

1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருமாறும் மீண்டும் வலியுறுத்தினார் நாமல் ராஜபக்ச.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரே அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தம்புத்தேகம.

2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது அரசியல் கூட்டத்தை அங்கிருந்தே நாமல் ராஜபக்ச ஆரம்பித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!