அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!
அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது.
அந்தவகையில் எமது நுகேகொடை கூட்டம் வெற்றியளித்தது.
மக்களுக்காக எமது அரசியல் நடவடிக்கை தொடரும். அச்சுறுத்தல்மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது.
மக்களின் குறைகேட்கும் தலைவராக நாமல் ராஜபக்சவே தற்போது விளங்குகின்றார்.” எனவும் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் கூறினார்.





