சிறைச்சாலையைக் காண்பித்து எம்மை மிரட்ட முடியாது: நாமல் சூளுரை!
“சிறைச்சாலைகளைக் காண்பித்து எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அஞ்சப்போவதில்லை.”-
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.
“ நாட்டு மக்கள் வழங்கும் செய்தி என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு புரிந்துகொண்டதாக தெரியவில்லை. இதற்கான பதில் அடுத்த தேர்தலில் கிடைக்கப்பெறும்.
சிறைச்சாலைகளை காண்பித்து, எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரல்மூலம் எம்மை ஒடுக்க முடியாது.
நாம் மீண்டெழுந்து முன்னோக்க செல்கின்றோம். மக்கள் ஆதரவு அதிகரித்துவருகின்றது.” – என்றார் நாமல் ராஜபகச்.




