ரஷ்யாவின் யூரல் ஆற்றின் நீர் மட்டம் உயர்வு!
ரஷ்யாவின் யூரல் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்தமையால் ஏற்பட்ட வெள்ளம், கஜகஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் அமைந்துள்ள அணை உடைவுக்கு காரணமாகியது.
இதனால் சுமார் 2,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Orsk மேயர் Vasily Kozupitsa வின் கருத்துப்படி, வெள்ளிக்கிழமை இரவு எல்லைக்கு வடக்கே 20 கிலோமீட்டர் (12.4 மைல்) தொலைவில் Orenburg பகுதியில் உள்ள ஓர்ஸ்க் நகரில் அணை உடைந்ததாக தெரிவித்தார்.
இதனால் 2,400 க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஓர்ஸ்கில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், ஒரு மாடி வீடுகள் நிறைந்த தெருக்களில் தண்ணீர் இருப்பதைக் காட்டியது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, அணை 5.5 மீட்டர் (கிட்டத்தட்ட 18 அடி) நீர் மட்டத்தை தாங்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.