டைட்டானிக் விபத்துக்கு பிறகு மீட்கப்பட்ட கடிகாரம் – அதிக விலைக்கு விற்பனை!
டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான கடிகாரம் ஒன்று 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் இந்த கடிகாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டைட்டானிக் விபத்திற்கு பிறகு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறன.
அந்தவகையில் குறித்த கடிகாரமே அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருளாகும்.
ஏப்ரல் 14, 1912 அன்று, நியூயார்க்கிற்குப் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் இறந்த தொழிலதிபரின் உடல் சில நாட்களுக்குப் பிறகு அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்டது. அவரிடம் இருந்தே குறித்த தங்க கடிகாரம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த கடிகாரமே தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.




