போண்டி துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்தாரி இந்தியாவை சேர்ந்தவரா?
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி சஜித் அக்ரம் (Sajid Akram) இந்தியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் அவரின் குடும்பத்தினர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருடன் சஜித் அக்ரமிற்கு குறைந்த தொடர்பே இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏறக்குறைய 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகளில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மற்றைய நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அவர்கள் பிலிப்பைன்ஸ் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தீவிர இஸ்லாமிய சித்தாந்தங்களின்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அவர்கள் எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்புபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என ஆஸ்திரேலிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.





