ஐரோப்பா

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஷ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா? : எதிர்கட்சியின் குற்றச்சாட்டு!

ரஸ்யாவில் பெலாரஸ் ஜனாதிபதிக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பெலாரஸ் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கிரெம்ளின் அவருக்கு நஞ்சூட்டியுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவின் உடல்நிலை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்கள், திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!