போர் சூழல் – உணவுக் கிடங்குகளை நிரப்பும் ஸ்வீடன் (Sweden)!

ஸ்வீடன் (Sweden) தனது பனிப்போர் கால உணவுக் கிடங்குகளை மீளவும் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவுடனான போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு சுவீடன் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக 2026 வரவு செலவு திட்டத்தின் கீழ், தேசிய தானிய இருப்புக்களை உருவாக்க சுமார் £45 மில்லியன் (575 மில்லியன் குரோனர்) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது உலகளாவிய விநியோகங்கள் துண்டிக்கப்பட்டால் நாடு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா இடையில் நிலவி வருகின்ற போர் முழு ஐரோப்பிய நாட்டிற்கும் பரவி மூன்றாம் உலக போர் உருவாக வாய்ப்பிருப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.