ஜெர்மனியில் தோட்டங்கள், மரங்கள் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை -அபராதம் செலுத்த நேரிடும்

ஜெர்மனியில் இந்த மாதம் முதல் செப்டம்பர் வரை, சில தோட்டக்கலை நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் பறவைகளை பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வேலிகள், மரங்கள் மற்றும் புதர்களை வெட்டுவது கட்டாயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், லைட் டிரிம்மிங் எணப்படும் மேலோட்டமான வெட்டுதல் பொதுவாக அனுமதிக்கப்படுகிறது.
இந்த விதிகள் கூட்டாட்சி இயற்கை பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.
இந்த விதிகளை யாராவது மீறினால் அபராதம் விதிக்கப்படும். அபராதத்தின் அளவு, விதி மீறல் எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்தது.
தோட்டக்காரர்கள் எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் விதிகளை சரிபார்ப்பது சிறந்தது.
(Visited 9 times, 9 visits today)