இலங்கையில் புதிதாக கையடக்க தொலைபேசிகளை வாங்க காத்திருப்போருக்கு எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என மேனகா பத்திரன விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, 15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஏதேனும் மொபைல் ஃபோன் நெட்வொர்க் மூலம் 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)