இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை

அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் முதல் சிலாபம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 65 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)