இலங்கை கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்சரிக்கை
 
																																		இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வழக்கமாக 2 லிட்டர் தண்ணீர் குடித்தால், சுமார் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். என்னவென்றால் இந்த வெப்பம் காரணமாக உங்களது உடலில் நீரிழப்பு ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
