தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை – திருச்சியில் 3 பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருச்சி அருகே இடி விழுந்ததில் செல்போன் வெடித்து காயமடைந்த மூன்று பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – சட்டமன்ற உறுப்பினர் நேரில் நலம் விசாரித்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்துள்ள வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மணிமேகலை (30), முத்துலட்சுமி (40), பெரியம்மாள் (50) ஆகிய 3 பெரும் வயலில் களை பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இடி அவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் இடி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் மணிமேகலை தனது இடுப்பு சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் திடீரென எதிர்பாரவிதமாக வெடித்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மேலும் அருகில் இருந்த
முத்துலட்சுமி, பெரியம்மாள் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.இதை பார்த்த வயலில் வேலை செய்து கொண்டு வந்தனர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மூன்று பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் காயம் அடைந்த அவர்களை இன்று காலை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.