ஐரோப்பா

விசா மோசடி தொடர்பில் நெதர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவுக்கு பயணம் செய்யத் தேவையான டிஜிட்டல் பயண அங்கீகாரத்தை வழங்கும் போலி இணையதளங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக தமது நாட்டு பயணிகள் நிதிச் சுரண்டலுக்கு உள்ளாவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிரித்தானியாவுக்குள் நுழைய ETA ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிஜிட்டல் ஆவணத்தைப் பெற இணையத்தில் தேடும் பயணிகள், மோசடியான இணைய தளங்களில் சிக்குவதாக தெரிய வந்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான தளம் மூலம் ETA பெறுவதற்கான கட்டணம் 16 ஸ்ரேலிங் பவுண்டுக்கும் குறைவாகவே உள்ளது.

எனினும் இந்த மோசடித் தளங்களில் டிஜிட்டல் ETA ஆவணத்திற்காக பயணிகளிடம் 200யூரோ வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மோசடித் தடுப்பு உதவி மையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இதுவரை பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலோர், தாங்கள் ஒரு மோசடி தளத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதை அறியாமலேயே கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்வோர் அந்நாட்டின் உத்தியோகபூர்வ இணைய தளமான gov.uk மூலம் டிஜிட்டல் ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் நெதர்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!